அமெரிக்காவில் பணி
எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் இணையருக்கு அமெரிக்காவில் பணிபுரிய அங்கீகாரம்
எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் இணையர்களுக்கு அமெரிக்காவில் பணி அங்கீகார அனுமதிகளை வழங்க ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது.
கடந்த 2015 ஒபாமா தலைமையிலான அரசு இருந்த போது எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் இணையர்கள் எச்-4 விசா பெற்று அமெரிக்காவில் வேலை பார்க்க முடியும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதனால் இந்தியர்கள் பலர் தங்கள் குடும்பத்துடன் அமெரிக்காவில் குடியேறினார்கள். அதன்பிறகு டிரம்ப் தலைமையிலான அரசு எச்-1பி விசா வழங்குவதில் நிறைய கட்டுப்பாடுகளையும் சட்ட திருத்தங்களையும் கொண்டு வந்தது.
அதன் ஒரு பகுதியாக எச்-1பி விசா வைத்து இருப்பவர்களின் இணையர்கள் இனி அமெரிக்காவில் இருக்கவும், வேலை பார்க்கவும் முடியாது என்ற சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது.
இந்த நிலையில் தற்போது ஜோபைடன் தலைமையிலான அரசு, எச்-1 பி விசா வைத்திருப்பவர்களின் மனைவிகளுக்கு அமெரிக்காவில் பணி அங்கீகார அனுமதி வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
Tags :