ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல்

by Admin / 12-11-2021 06:06:33pm
 ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல்

 

புதிய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது...

புதிய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் இன்று சுற்றுப்பாதையில் உள்ள ஆய்வகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.
 
நாசா மற்றும் தனியார் ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இணைந்து விண்வெளியை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி க்ரூ டிராகன் கேப்ஸ்யூல்  மூலம் நான்கு வீரர்கள் விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்பட்டனர்.

 6 மாத பயணத்தை முடித்துக் கொண்டு இந்த குழுவானது கடந்த வாரம் பூமிக்கு திரும்பியது.

 ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ-3 விண்ணுக்கு ஏவப்படுவது தள்ளிப்போன நிலையில் நேற்று வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

 நேற்று விண்ணில் ஏவப்பட்ட புதிய ஸ்பேஸ்எக்ஸ் க்ரூ டிராகன் காப்ஸ்யூல் மிஷன் 3 சுற்றுப்பாதையில் உள்ள ஆய்வகத்தில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo