ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து-. மோசமான வானிலை மீட்பு பணிகளை சிக்கலுக்குரியதாக்கியுள்ளது.

by Admin / 20-05-2024 02:33:44am
ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர்  விபத்து-. மோசமான வானிலை மீட்பு பணிகளை சிக்கலுக்குரியதாக்கியுள்ளது.

ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஹோசைன் அமீரம் டோ லாகியன் சென்ற ஹெலிகாப்டர் அஜர்பை ஜான் வழியில் கடும் பனிமூட்டத்தால் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்களை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல். இது குறித்து ஈரான் அதிகாரி செய்தி நிறுவனத்திற்கு அளித்த தகவல் .அதிபரும் வெளி உறவு துறை அமைச்சரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் நாங்கள் இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறோம் .ஆனால் விபத்து நடந்த இடத்தில் இருந்து வரும் தகவல்கள் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மோசமான வானிலை மீட்பு பணிகளை சிக்கலுக்குரியதாக்கியுள்ளதாகவும் அங்குள்ள செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்காக நாடு முழுவதும் பிரார்த்தனைகள் நடத்தப்படுவதாகவும் அவரை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபடுவதை அனைத்து தொலைக்காட்சிகளும் நேரடியாக ஒளி பரப்பை மேற்கொள்வதற்காக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் பதவி காலத்தில் ஒழுக்கச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதாகவும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்கு முறையை அவர் மேற்பார்வை இட்டதாகவும் உலக வல்லரசுகளுடன் அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதில் பங்கேற்று உள்ளார் என்றும் ஈரான் இரட்டை அரசியலமைப்பில் மதகுரு அரசாங்கத்தின் இடையில் முக்கிய  இறுதி கருத்தை உருவாக்கக்கூடிய உச்சபட்ச அதிகாரம் உடைய தலைவராக அவர் திகழ்ந்தார் என்றும் அங்குள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via

More stories