விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் பலி

by Staff / 16-05-2024 02:21:47pm
விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட மகளிரணி செயலாளர் பலி

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் மனைவி காளியாதேவி (40). இவர் விசிக மாவட்ட மகளிரணி செயலாளராகவும், பெருமாநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலாண்மை குழு தலைவராகவும் இருந்தார். இவர் ஸ்கூட்டரில் பெருமாநல்லூர் செல்லும் ரோட்டில் ஸ்ரீபாத கருப்பராயன் கோவில் அருகே ரோட்டில் இடதுபுற ஓரமாக தனது வாகனத்தை நிறுத்திவிட்டு நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த கிரேன் காளியாதேவியின் வாகனம் மீது மோதியது. இதில் கீழே விழுந்த காளியாதேவியின் மீது கிரேன் சக்கரம் ஏறியது. படுகாயமடைந்த காளியாதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும் நிலையில், இதை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்று விசிகவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via