5 மாநில சட்டசபை தேர்தல்- விதிகளை மீறும் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் மீது.. 23 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு

by Admin / 01-02-2022 02:14:17pm
5 மாநில சட்டசபை தேர்தல்- விதிகளை மீறும் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் மீது.. 23 ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு

உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி முதல் நடைபெற உள்ளது.

உத்தரபிரதேசத்தில் மட்டும் 7 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

5 மாநிலங்களிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பிரசாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகள் ஈடுபட்டுள்ளன. 

பெரும்பாலான தொகுதிகளில் வேட்பாளர்கள் விதிமீறல்களில் ஈடுபடுவதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர் 

5 மாநிலங்களிலும் பண பட்டுவாடாவை தடுப்பதற்கு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடத்தப்படுகின்றன. 

இதன்மூலம் பல கோடி ரூபாய் பணம் மற்றும் பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது 

5 மாநிலங்களிலும் விதிகளை மீறும் வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள் மீது உடனுக்குடன் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது . 

பிரசாரம் தொடங்கிய நாளில் இருந்து இதுவரை 17 ஆயிரம் விதி மீறல்கள் நடந்து இருப்பதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் கண்டறிந்து உள்ளனர்.

அதன் அடிப்படையில் பல்வேறு கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் மீது 23ஆயிரத்து 500 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  

பொதுமக்கள் அளித்த 25 ஆயிரத்து 365 புகார்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு  வழக்குகள் பதிவாகியுள்ளன.

அதிக புகாருக்கு உள்ளாகி இருக்கும் வேட்பாளர்கள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரிகை விடுத்துள்ளது .
 

 

Tags :

Share via