தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை காணமல் போய் விடுவார்-முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ

by Admin / 13-04-2024 11:41:15pm
தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை காணமல் போய் விடுவார்-முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ

தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை காணமல் போய் விடுவார்.2021ல் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். நிதர்சனமான உண்மை என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ காட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வடக்கு மாவட்ட அதிமுக தேர்தல் அலுவலகத்தில் வைத்து மாற்றுக் கட்சியினர்  அதிமுக இனாம் மணியாச்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் ரேவதி ஏற்பாட்டில் ஓபிஎஸ் அணி தகவல் தொழில்நுட்பு பிரிவு நகர செயலாளர் ஹரிஹரன் தலைமையில் 40க்கு மேற்பட்டோர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னணியில் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். தொடர்ந்து இந்திய கனரக வாகன ஓட்டுனர்கள் நல கூட்டமைப்பு சார்பில் அதிமுகவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.பின்னர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்:

கட்சி யார் தலைமையில் இயங்க வேண்டும் என்பதை அந்தக் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்,அண்ணாமலை ஒரு அண்ணாவி கிடையாது எல்லா கட்சிகளுக்கும்,அண்ணாமலை என்றைக்கு ஜோசியர் ஆனார் என்று தெரியவில்லை.‌ ஆருடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். முதலில் அவர் கோவை தொகுதியில் வெற்றி பெறட்டும்

,டிடிவி தினகரன் ஓபிஎஸ் பிரிந்த பிறகு தான் எங்களுடைய நிலைப்பாட்டைமுடிவு செய்து ஒற்றை தலைமை தான் அது எடப்பாடி பழனிச்சாமி தான் என்பதை தொண்டர்கள் அனைத்து நிர்வாகிகள் நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையம் அனைத்தும் ஏற்று முடிவுக்கு வந்துவிட்டது அடுத்த கட்சி பற்றி பேச அண்ணாமலைக்கு  அரசியல் அரிச்சுவடி இல்லை.2021ல் டிடிவி தினகரன் கூட்டணியில் சேர்த்து இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று கூறுவது தவறு.2021ல் பாஜகவுடன் கூட்டணி அமைக்காமல் இருந்திருந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்திருக்கும். நிதர்சனமான உண்மை. பாஜக வேண்டாம் என்று காலம் கடந்து எடுத்த முடிவு.அதிமுகவில் தற்போது எந்த பிரிவும் கிடையாது. 2017ல் கட்சி ஆரம்பித்த டிடிவி தினகரன் கோவில்பட்டியில் வெற்றி பெற முடியவில்லை.டிடிவி தினகரனுக்காக அவர் தொகுதியில் சென்று பிரச்சாரம் செய்யும்போது அவரை உயர்த்தி பேசுவது வாடிக்கை தான் .ஆனால் நாங்கள் கேட்டது  ஒரு தொகுதி தான்,, பாஜக கொடுத்தது இரண்டு தொகுதி என்று டிடிவி தினகரன் கூறினார்.ஏதோ ஆடி தள்ளுபடி போல ஒரு சீட்டு வாங்கினால் ஒரு சீட்டு இலவசம் என்ற முறையில் தொகுதி ஒதுக்கீடு செய்துள்ளனர்.பாஜக கூட்டணியில் சீட்டு வாங்குவதற்கு ஆள் இல்லை. அதேபோன்றுதான் இரண்டு சீட்டு கேட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு மூன்று சீட்டு கொடுத்துள்ளனர்.தமிழக முழுவதும் திமுகவை எதிர்த்து கடுமையாக பேசி வரும் பாஜக,அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழிக்கு எதிராக வேட்பாளரை  நிறுத்தாமல் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒதுக்கி உள்ளது.கனிமொழியை எதிர்த்து பாஜக களம் காண தயாராக இல்லை இதுதான் கள்ளக் கூட்டணி. இதன் ரகசியம் தேர்தலுக்கு பின்னர் வெளிவரும்.தமிழகத்தில் திராவிட கட்சிகளை எந்த காலத்தில் அழிக்க முடியாது. கற்பனை கனவில் கூட இது நடக்காது.52 ஆண்டுகள் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. அதில் அதிமுக 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர்.2021ல் ஆட்சி வாய்ப்பினை இருந்தாலும் மக்களின் செல்வாக்கு இழக்கவில்லை எங்களுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுத்துள்ளனர். டிடிவி தினகரன் ஓபிஎஸ் பற்றி எங்களுக்கு கவலை அவர்கள் முடிந்து போன விஷயம். எங்களை விட்டு பிரிந்து போனவர்கள் தான் காணாமல் போய் உள்ளனர்.இது போன்ற வரலாறுகள் அண்ணாமலைக்கு தெரியாது. அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி. அவர் ஒரு அதிகாரியாக இருந்தவர். அந்த அளவுக்கு தான் அவர் செயல்படுவார். அரசியல் அரிச்சுவடி தெரியாது. தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை காணமல் போய் விடுவார்.நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் அண்ணாமலை இருந்தார் என்று கூறுவார்கள். அண்ணாமலை காணாமல் போய்விடுவார் என்றார் அவர்.

 

 

Tags :

Share via