சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்த முதல் இந்தியர்

சர்வதே விண்வெளி நிலையத்திற்கு சென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷூ சுக்லா படைத்துள்ளார். 'ஆக்ஸியம்-4' திட்டத்தின் மூலம் இஸ்ரோ வீரர் சுபான்ஷூ சுக்லா உள்ளிட்ட 4 பேர் நேற்று (ஜூன் 25) விண்வெளி பயணத்தை தொடங்கினர். இந்நிலையில், அவர்கள் சென்ற டிராகன் விண்கலம் இன்று சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. தொடர்ந்து இந்திய நேரப்படி மாலை 4 மணியளவில் அந்த விண்கலம் விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டது. அடுத்த 2 வாரங்களுக்கு சுக்லா அங்கு ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்.
Tags :