குளிர்கால கூட்டத்தொடர் இன்று டிசம்பர் 19ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற 2025 ஆம் ஆண்டிற்கான குளிர்கால கூட்டத்தொடர் இன்று டிசம்பர் 19ஆம் தேதி தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கிய இத்தொடர் 19 நாட்களில் மொத்தம் 15 அமர்வுகளை கொண்டிருந்தது. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் இன்று வந்தே மாதரம் பாடலுடன் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மாநிலங்கள் அவை சி.பி .ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒத்தி வைக்கப்பட்டது. இக் குளிர்கால கூட்டத் தொடரில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் பி. பி. ஜி. ராம். ஜி மசோதா, நிதி மற்றும் வரி தொடர்பான மசோதாக்கள், காப்பீடு ,அணுசக்தி துறைகளில் சீர்திருத்தங்கள் உள்ளடக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. வந்தே மாதரம் தேசிய பாடல் 150வது ஆண்டு மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்தும் அவையில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டன.
Tags :


















