திராவிட மாடல் ஆட்சி திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும் - முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
திமுக ஆட்சி திராவிட மாடல் திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய திட்டத்தை கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தமிழக மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது என்று தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து பேசுகையில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பா.ஜ.க.சார்பில் பா.ஜ.க அரசின் மத்திய நலத்திட்டங்கள் குறித்த பொதுக்கூட்டம் காமராஜர் சிலை அருகே நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் வெங்கசேடன்சென்னகேசவன் தலைமை வகித்தார். இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் நம்மையும் அறியமால் நம்முள் வாழ்ந்து கொண்டு இருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் பாஜக மிக வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.மக்கள் அலை அலையாக பா.ஜ.க நோக்கி வருகின்றனர்.தமிழகத்தில் ஆட்சி முறை மாற வேண்டும் மக்கள் விரும்புகின்றனர். திமுக ஆட்சி திராவிட மாடல் என்று கூறுகின்றனர். இது திருமங்கலம் பார்முலா போன்று தான் இருக்கும். திருமங்கலம் பார்முலா என்று சொல்லி பணத்தினை தந்தனர். இன்று திராவிட மாடல் என்று கூறுகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை அள்வீசியுள்ளனர். கொடுத்து வாக்குறுதி குறித்து முதல்வரிடம் கேளுங்கள், பெண்கள் கேட்க வேண்டிய கேள்வி ரூ 1000 எங்கே, எல்லாவற்iயும் மக்கள் மறந்து விடுவார்கள் என்பது தான் திமுகவிற்கு வசதி தமிழக மக்கள் மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில் வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் ஊழலற்ற, நேர்மையான, வளர்ச்சி தரக்கூடிய திட்டத்தை கொண்டு வந்து ஆட்சி செய்ய முடியும் என்ற நம்பிக்கையை பாஜக தமிழக மக்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறது.வளர்ச்சி நோக்கி பயணம் செல்ல வேண்டும், மக்களை பிரித்தழும் சூழ்நிலைகள் மாறியாக வேண்டும், வரக்கூடிய 2024ல் மீண்டும் பிரதமர் மோடி பிரதமாராக வரும் போது உலகில் இந்தியா முதல் நிலை நாடாக உருவாகி தீரும், உலக நாடுகள் நம்மை வணங்க ஆரம்பித்துள்ளார்கள், உலக நாடுகள் வலம் வர தொடங்கியுள்ளன. இந்த நிலை வருவதற்கான நாம் தொடர்ந்து உழைப்போம் என்றார்.
கூட்டத்தில் பா.ஜ.க.நகர, ஒன்றிய மற்றும் அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags :