பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் - கனிமொழி எம்.பி பேச்சு .

by Writer / 03-01-2022 06:51:32pm
பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர்  - கனிமொழி  எம்.பி பேச்சு .

பெண்களுக்கான உரிமைகளை தொடர்ந்து ஆண்களே நிர்ணயிக்கின்றனர், பெண்கள் தொடர்ந்து ஊமையாக்கப்படுகின்றனர் என திமுக எம்.பி கனிமொழி பேசியுள்ளார். பாராளுமன்றத்தில் மொத்தம் 110 பெண் எம்.பி.க்கள் உள்ளோம் எனவும், ஆனால், பெண்ணுக்கான திருமண வயதை 21ஆக உயர்த்தும் மசோதா ஆய்வு குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரில் 30 பேர் ஆண்கள் ஒரே ஒரு பெண் மட்டுமே அந்த குழுவில் இடம் பெற்றுள்ளார் என அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த, சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி, பெண்ணின் திருமண வயதை 21 ஆக உயர்த்துவது குறித்துப் பேசினார். தொடர்ந்து, பெண்ணின் திருமண வயதை அதிகரிக்க மத்திய அரசு செயற்குழு ஒன்றை அமைத்து, ஜெயா ஜேட்லி தலைமையிலான இந்தச் செயற்குழு பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21ஆக உயர்த்தும் பரிந்துரையை டிசம்பர் மாதம் தொடக்கத்தில் சமர்ப்பித்தது.

செயற்குழுவின் யோசனையை ஏற்றுப் பெண்ணின் திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via