அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல: தமிழிசை

by Staff / 22-02-2023 02:51:35pm
அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல: தமிழிசை

ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது என்று எம்.பி. வெங்கடேசன் சொல்கிறார், டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல, அதுவும் கல்வி பயிலும் புனிதமான இடம்தான் என்று தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. சு.வெங்கடேசனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ட்வீட் செய்துள்ள அவர், டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல. ராஜ்பவன்கள் பயிற்சி பட்டறைகளாக இருக்கலாம். அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories