ரயில் விபத்து வேதனையளிக்கிறது - விஜய்

by Editor / 08-07-2025 04:10:10pm
ரயில் விபத்து வேதனையளிக்கிறது - விஜய்

செம்மங்குப்பம் ரயில் விபத்தில் மாணவர்கள் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த செய்தி, அதிர்ச்சியும் மிகுந்த மன வேதனையையும் அளிக்கிறது என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். விபத்து நடைபெற்ற இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via