பர்னிச்சர் செய்யும் பட்டறையில் தீ விபத்து.

பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் பள்ளிக்கூட பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் வீட்டின் அருகில் பட்டறை வைத்து கடை மற்றும் வீடுகளுக்கு மொத்தமாக ஆர்டர் எடுத்து ஜன்னல் , கதவு மற்றும் பர்னிச்சர்களை செய்து கொடுத்து வருகிறார். இந்தநிலையில் நள்ளிரவில் பட்டறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அப்போது மரப்பலகைகள் மற்றும் மரச்சட்டங்கள் தீயில் எரிந்தன சத்தம் கேட்டு முருகன் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சியடைந் தார். இதுகுறித்து உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து 2 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து நீண்டநேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் முருகனின் வீடு மற்றும் அருகில் உள்ள மற்ற வீடுகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் பூதப்பாண்டி போலீசார் சம்பவ
இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது தீவிபத்து நடந்த இடத்தில் எந்தவித மின் உபகரணங்களும் இல்லை. எனவே மின்கசிவு காரணமாக தீ விபத்து நடக்க வாய்ப்பில்லை எனவும் , யாரேனும் தீ வைத்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags :