by Staff /
09-07-2023
01:49:38pm
ஆப்ரிக்க நாடான சூடானில் ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இரு படைகளின் தலைவர்களுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சூடான் நாட்டில் வன்முறை ஏற்பட்டது. மேற்கு ஒண்டூர்மான் மீது ராணுவ படையினர் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 22 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். இந்த கலவரத்தில் இதுவரை 1,133 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சுமார் 7 லட்சம் பேர் அண்டை நாடுகளுக்கு குடிபெயர்ந்தனர்.
Tags :
Share via