by Staff /
09-07-2023
02:05:20pm
மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. நிலக்கரி தொழிற்சாலையில் வேலைக்கு வந்த பழங்குடியின தம்பதியை தாக்கிய குண்டர்கள், கணவரை கொடூரமாக தாக்கி கட்டி வைத்தனர். பின்னர், 11 பேர் சேர்ந்து சில நாட்களாக அவர் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பி ஓடிய தம்பதி சொந்தூர் ராய்கர் போலீசில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து முக்கிய குற்றவாளியான தொழிற்சாலை உரிமையாளரை கைது செய்த போலீசார் மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags :
Share via