கணவர் டார்ச்சரால் தற்கொலை

தெலங்கான மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அம்மிகல்லா தர்மதேஜ் - கோட்டே ஸ்ரவ்யா (27) தம்பதி. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, தர்மதேஜ் வேலைக்காக துபாய் சென்றார். அப்போது, மனைவி வேறு ஒருவருடன் பேசி வருவதாக கணவருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனை கூறி மனைவியிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில், நேற்று (ஆக.5) மனைவி தற்கொலை செய்துகொண்டார்.
Tags :