ஓடும் ரயிலில் மாணவர்களை தாக்கி கொள்ளையடித்த கும்பல்

பீகாரில் தர்பங்கா-பாட்னா பயணிகள் ரயிலில் பயணித்த மாணவர்கள் மீது 10 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடிகள் மற்றும் பெல்ட்கள் கொண்டு மாணவர்களை கடுமையாக தாக்கியதுடன், மாணவர்களிடம் இருந்து தொலைபேசிகள், பணம் மற்றும் பிற பொருட்களை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :