சென்னையில் அதிகரிக்கும் டைபாய்டு காய்ச்சல்

by Staff / 09-08-2023 05:38:50pm
சென்னையில் அதிகரிக்கும் டைபாய்டு காய்ச்சல்

சென்னையில் டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிகளவில் மருத்துவமனைக்கு வருவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக காய்ச்சலுடன் வாந்தி, வயிற்றுப்போக்கு அறிகுறியுடன் மருத்துவமனைக்கு பலர் வருகிறார்கள். டைபாய்டு வந்தால் அதிகபட்சமாக 104 டிகிரி வரை காய்ச்சல் தாக்கும். அசுத்தமான நீர் அல்லது உணவு மூலம் ஒருவர் இந்த டைபாய்டு பாக்டீரியா தொற்றை பெற வாய்ப்பு உள்ளது. மேலும் தலைவலி, வயிற்று வலி, உடல் வலி, தொடர்ந்து வயிற்றுப்போக்கு போன்றவை டைபாய்டு காய்ச்சலின் அறிகுறிகளாகும்.

 

Tags :

Share via

More stories

Logo