திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சி ..?

by Editor / 02-03-2023 10:18:14am
திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சி ..?

3 மாநிலங்களில் தற்பொழுது வாக்கு எண்ணிக்கை நடைபெறுகின்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகளைப் பொறுத்தவரையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் கூறப்பட்டிருந்தது, சரியாக அமைந்திருக்கின்றது, திரிபுரா மற்றும் நாகலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்பது மீண்டும் உறுதியாகி இருக்கின்றது. அதேபோன்று மேகாலயா மாநிலத்தில் அந்த கட்சிக்கு அரிசி பெரும்பான்மை எந்த ஒரு கட்சிக்கும் கிடைக்காது என்று சொல்லப்பட்ட நிலையில் அங்கு  பெரும்பான்மைக்கு தேவையான 31 இடங்களுக்கும் குறைவாகவே மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி  முன்னிலையில் யாரும் இல்லை என்றுள்ளது. 

திரிபுரா மாநிலத்தை பொருத்தவரை தேர்தலுக்குப்பிந்தைய  கருத்துக்கணிப்புகளில் கூறியிருந்ததைப்போல  45 தொகுதிகள் வரை அங்கு பாஜக பெற கூடும் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது திரிபுரா மாநிலத்தில் தொடர்ந்து பாஜக முன்னிலை பெற்று வண்ணமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட அங்கு இருக்கக்கூடிய 60 தொகுதிகளில் ஏறக்குறைய 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று இருக்கின்றது. கடந்த தேர்தலில் 36 இடங்களை கைப்பற்றி திரிபுரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைத்தது. 25 ஆண்டுகளாக திரிபுரா மாநிலத்தில் இருந்து வந்த கம்யூனிஸ்ட் ஆட்சியை தாண்டி 2018 ஆம் ஆண்டு அங்கு பாஜக திரிபுராவில் ஆட்சி அமைத்தது. திரிபுரா மாநிலத்தை பொருத்தவரை அந்த மாநிலத்திலே மாணிக் சர்க்கார் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மூத்த தலைவராக இருக்கக்கூடியவர். 2018 ஆம் ஆண்டு வரை 25 ஆண்டுகளாக அவர்களுடைய கட்டுப்பாட்டிலே திரிபுர மாநிலம் இருந்து வந்தது. மேற்குவங்கத்தில் ஜோதிபாசு மூத்த கம்யூனிஸ்ட் தலைவராக இருந்ததைப் போன்று மாணிக் சர்க்கார் தலைமையிலே மார்க் திரிபுராவில் இரும்புக்கோட்டையாக வைத்திருந்தார்கள் ஆனால் 2018 ஆம் ஆண்டு பாஜக திரிபுராவை கைப்பற்றிய நிலையில் தற்போது இரண்டாவது முறையாக பாஜக 38 இடங்களில் முன்னிலை பெற்று அடுத்து பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் உருவாகிஉள்ளது.

பழங்குடியினர் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலமாகும், இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர்களின் 60 சதவீதத்திற்கும் கூடுதலானவர்கள் பழங்குடியினர் அந்த அன்னாசிப்பழம் சின்னத்தில் போட்டியிடக் கூடிய டிஎம்பி என்று சொல்லப்படக்கூடிய டிப்ரமோத்தா என்கின்ற கட்சியும் கணிசமான போட்டியினை ஏற்படுத்தி உள்ளது. பாஜக இந்த தேர்தலில் திரிபுராவில் வெற்றி பெற்றாலும் அந்த கட்சிக்கு கடுமையான முறையில் போட்டி அளிக்கக்கூடிய கட்சியாக திப்புரா மவுத்தா கட்சி இருக்கும் என்று சொல்லப்பட்டது அந்த கட்சியினுடைய தலைவர் மாணிக்கையா தெபர்மா கணிசமான வாக்குகளை பெறுவார் என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் இரண்டாவது இடத்தை அந்த டிஎம்பி கட்சி பெற்றிருக்கின்றது திரிபுராவில் 11 இடங்களை பெற்றிருக்கின்றது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

 

Tags :

Share via