பெற்றோரை இழந்த ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள்

by Admin / 17-01-2022 11:14:48am
 பெற்றோரை இழந்த ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள்

கொரோனாவால் ஒரு லட்சத்து 47 ஆயிரம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேசிய சிறார் உரிமைகள் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், 2020 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் தற்போது வரை நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 492 குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரில் ஒருவரையோ அல்லது இருவரையுமோ இழந்துள்ளனர் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுநோய்களின் போது பெற்றோரை இழந்ததால் கவனிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் குறித்த விவரங்களைத் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாமாக முன்வந்து அளித்துள்ளது.
 
இது தொடர்பாக புள்ளிவிவரங்களை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 'பால் ஸ்வராஜ் போர்ட்டல் - என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. 

இதனிடையே கொரோனா 3 ஆம் அலை பரவலில் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுடன் வரும் 19 ஆம் தேதி காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via