முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம் : எம்.பி., கண்டனம்

by Staff / 04-04-2023 01:56:57pm
முகலாயர்கள் குறித்த பாடங்கள் நீக்கம் : எம்.பி., கண்டனம்

மொகலாய மன்னர்கள் பற்றிய பாடங்களை NCERT புத்தகங்களில் நீக்கியதை கண்டித்து மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் ட்விட்டரில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். சாலையில் துவங்கி சரித்திரம் வரை எல்லாவற்றிலும் வெறுப்பையே ஒன்றிய அரசு வெளிப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார். மேலும், சாலையோர வியாபாரிகளுக்கான கடன் திட்டத்தில் சிறுபான்மையினருக்கான கடன் இரண்டு ஆண்டுகளில் மூன்றில் ஒரு பங்காக குறைக்கப்பட்டுள்ளதாகவும் பதிவில் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo