வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைமையான சிலைகள் பறிமுதல்

by Staff / 16-05-2023 04:13:44pm
வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைமையான சிலைகள் பறிமுதல்

ராஜா அண்ணாமலைபுரம் முதலாவது குறுக்குத் தெருவைச் சோந்த சோபா துரைராஜன் என்பவா் வீட்டில் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அந்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பழைமையான ராமா் சிலை, நந்தி சிலை, கவல காளி சிலை, ஜோடி புருஷா சிலை ஆகிய உலோகச் சிலைகள், ஹனுமன் சிலை, பாயும் குதிரை சிலை, 2 நின்ற நிலை யாளி ஆகிய 4 மரச் சிலைகள், 6 தஞ்சாவூா் ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பான விசாரணையில், சிலைக் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய, மறைந்த தீனதயாளன் நடத்தி வந்த 'அபா்ணா ஆா்ட் கேலரி'யில் இருந்து 2008 முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அந்த சிலைகளை வாங்கியிருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரை, அப் பிரிவு ஏடிஜிபி சைலேஷ்குமாா் யாதவ் பாராட்டினாா்.

 

 

Tags :

Share via