புளியங்குடி மாணவி தற்கொலை பேராசிரியர்கள் 2 பேர் கைது 

by Editor / 13-03-2022 10:40:25am
புளியங்குடி மாணவி தற்கொலை பேராசிரியர்கள் 2 பேர் கைது 


தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சார்ந்தவர் கணேசன் மாடத்தி தம்பதியினர் மூத்த மகள் இந்து பிரியா இவர் புளியங்குடி மனோ கல்லூரிமாணவிபி,காம் முதலாமாண்டு படித்து வந்தார்.கல்லூரியில் முதல் ஆண்டு மாணவி என்பதால் ஒரு மாணவி செல்போன்  கொண்டு வந்ததாக கூறப்படுகிறது அதனை இந்து பிரியா வாங்கி பார்த்ததாகவும் கூறப்படுகிறது.  இந்து பிரியா செல்போனை கையில் வைத்திருந்த சமயம் கல்லூரியின் உடைய பேராசிரியர் முத்துமணி என்பவரும் பேராசிரியர் வளர்மதி என்பவரும் பார்த்து மாணவியை கண்டித்தாக கூறப்படுகிறது.ஆனால் மாணவி அந்த செல்போன் தனக்கு உரியது இல்லை என்றும் அது மற்றொரு மாணவிக்கு உரியது என்றும் தெரிவித்ததாகவும் ஆசிரியர்கள் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை என்றும் கூறப்படுகிறது.இதனைத்தொடர்ந்து மாணவியை இரண்டு பேராசிரியர்களும்  தொடர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி வந்துள்ளதாகவும் தான் தவறு செய்யவில்லை எப்படி மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியும் என்றுஅவர்களிடம் மாணவி கேட்டதாக கூறப்படுகிறது இதன் காரணமாக மனமுடைந்த  மாணவி இந்து பிரியா  நேற்று கல்லூரி இருந்தும் கல்லூரிக்குச் செல்லாமல் அதிகாலையிலேயே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இது தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் ஆசிரியர்களது பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆசிரியர்களிடம் சொக்கம்பட்டி காவல்நிலையத்தில் வைத்து தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் அவர்கள் மீது மாணவி எழுதிய கடிதமும் பிற மாணவர்களிடம் நடந்தப்பட்ட  விசாரணையில் குற்றச்சாட்டு உறுதியானதைத்தொடர்ந்து தற்போது பேராசிரியர்கள் முத்துமணி,வளர்மதி ஆகியோர் .கைது செய்யப்பட்டு புளியங்குடி காவல் நிலையத்திற்கு 2 பெரும் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

புளியங்குடி மாணவி தற்கொலை பேராசிரியர்கள் 2 பேர் கைது 
 

Tags : 2 Puliyangudi student suicide professors arrested

Share via

More stories

Logo