கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து

by Admin / 13-03-2022 10:39:34am
கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து

மேற்கு வங்க மாநில தலைநகர்  கொல்கத்தாவின் டாங்க்ரா பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 

சிறிது நேரத்தில் தீ மளமளவென தோல் தொழிற்சாலை பகுதி முழுவதும் பரவியது. இதையடுத்து அந்த தொழிற்சாலையின் அருகில் வசித்து வந்த குடிசைவாசிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக கொல்கத்தா காவல்துறை தெரிவித்துள்ளது.

தகவல் கிடைத்ததும் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், குறுகிய பாதை காரணமாக, தீயணைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக மேற்கு வங்க தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார். 
 
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினருக்கு அந்த பகுதி உள்ளூர் மக்கள்  உதவி செய்தனர். முதல்வர் மம்தா பானர்ஜி நிலைமை குறித்து கேட்டறிந்தார்.

தீப் பிடித்து எரிந்த தோல் பதனிடும் தொழிற்சாலைக்குள் யாராவது சிக்கியுள்ளனரா என்பது குறித்து விபரங்கள் வெளியாக வில்லை.

 

Tags :

Share via

More stories