ரயிலில் சிக்கிய 121.8 கிலோ கஞ்சா.. காவல்துறை அதிரடி

by Staff / 16-05-2023 03:32:49pm
ரயிலில் சிக்கிய 121.8 கிலோ கஞ்சா.. காவல்துறை அதிரடி

தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் "கஞ்சா வேட்டை 4.0" நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது வரை ரயில் நிலையங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சென்னை மாவட்ட இரயில்வேக்குட்பட்ட சென்னை சென்ட்ரல், எழும்பூர், சேலம், கோயம்புத்தூர் ஆகிய உட்கோட்டங்களில் உள்ள இரயில்வே காவல் நிலையங்களில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மொத்தம் 121.8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஒரு பெண் உட்பட 10 நபர்கள் கைது செய்துள்ளனர். மேலும், தமிழகம் முழுவதும் அனைத்து இரயில் நிலையங்களிலும் மோப்ப நாய் படை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via

More stories