தேசிய திரைப்பட விருது விழாவில் மொத்த விருதுகள் என்னென்ன ?

by Editor / 25-10-2021 07:37:41pm
தேசிய திரைப்பட விருது விழாவில் மொத்த விருதுகள் என்னென்ன ?

 

டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில் யார் யாருக்கு என்னென்னெ விருது வழங்கப்பட்டது தெரி யுமா?
டெல்லியில் 67 வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சென்சார் செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் பொழுது இந்திய திரைத் துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே எனும் விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டது.


இந்த விருது கடைசியாக சிவாஜிகணேசன் அவர்களுக்கு தான் வழங்கப்பட்டிருந்தது. இந்த வரிசையில் தற்போது ரஜினிகாந்துக்கு இந்த விருது கொடுக்கப்பட்டுள்ளது. விருதை ரஜினிகாந்த் அவர்களுக்கு வெங்கையா நாயுடு அவர்கள் வழங்கியுள்ளார். மேலும் சிறந்த திரைப்படத்துக்கான விருது அசுரன் படத்திற்காக தனுசுக்கு வழங்கப்பட்டுள்ளது.


சிறந்த துணை நடிகருக்கான விருது சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்த விஜய் சேதுபதி அவர்களுக்கும், குழந்தை நட்சத்திர விருது கேடி கருப்பு படத்தில் நடித்த நாக விஷால் அவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபோல சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படத்தின் கண்ணான கண்ணே எனும் பாடலுக்காக டி.இமான் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சிறப்பு விருதாகிய ஜூரி எனும் விருது நடிகர் பார்த்திபன் அவர்கள் தயாரித்து நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

Tags :

Share via

More stories

Logo