இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்ட ஓராண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

by Admin / 17-01-2022 11:35:11am
இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்ட ஓராண்டு தினத்தை முன்னிட்டு, சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

 
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா  இந்தியாவில் பரவத்தொடங்கி, பல்வேறு உருமாற்றங்களுடன் தற்போதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த தொற்றுக்கு எதிராக மக்களை பாதுகாத்திடும் நோக்கில் மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசியை செலுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்த தடுப்பூசி இயக்கம் துவங்கப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 

இதனை கொண்டாடும் வகையில், சொந்த நாட்டின் தயாரிப்பிலான கோவாக்சினுடன் கூடிய சிறப்பு தபால் தலையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ளார்.
 
இதில் சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர், பெண் ஒருவருக்கு தடுப்பூசி செலுத்துவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து  நிகழ்ச்சியில் மகிழ்ச்சி பொங்க பேசிய மன்சுக் மாண்டவியா, தடுப்பூசி இயக்கத்தை மக்களிடம் வெற்றிகரமாக கொண்டு செல்ல உதவிய முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். 

சொந்த நாட்டில் உருவான தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து பலர் சந்தேகம் எழுப்பிய போதும், பிரதமர் மோடியின் அயராத விழிப்புணர்வு பிரச்சாரத்தால் இது சாத்தியமானதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

 

Tags :

Share via