அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி நீக்கப்பட்டவர்கள் .. நீக்கப்பட்டவர்கள் தான்.இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

by Staff / 22-09-2024 02:45:10pm
அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி நீக்கப்பட்டவர்கள் .. நீக்கப்பட்டவர்கள் தான்.இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

திருவள்ளூர் மாவட்ட த்தில் அதிமுக சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு 12 பேர் எதிர்ப்பு என செய்தி போடுகிறார்கள்..ஒருவர் கூட எதிர்ப்பு இல்லை,ராணுவ கட்டுப்பாட்டோடு இருக்கிறது .எங்கள் கட்சி.எதிர்ப்பு இருக்கிறது என உங்களால் நிரூபிக்க இயலுமா?அதிமுக இணையும் என செய்தி போடுகிறார்கள்.அதிமுக பொதுக்குழு எடுத்த முடிவின்படி நீக்கப்பட்டவர்கள் .. நீக்கப்பட்டவர்கள் தான்.இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.பொதுக்குழு எடுத்த முடிவு தான் இறுதியானது.தேசிய கட்சிக்கு ஆதரவாக இருக்கின்ற நாளிதழ்கள் தங்களைப் பற்றி நடுநிலையோடு செய்திகள் வெளியிட வேண்டுமே தவிர.. தங்களுக்கு எதிராக செய்திகளை வெளியிட வேண்டாம் என்றும்.உணா்ச்சி பொங்க  பேசினார்.

 

Tags :

Share via