வால்பாறையில் ரூ.பலகோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற ஐந்து பேர் கைது.

கோவை மாவட்டம் வால்பாறையில் இறந்த யானையின் தந்தத்தை திருடி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் கிரிதரன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் மற்றும் சுரேஷ் கிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான பத்துக்கும் மேற்பட்ட வனப்பணியாளர்கள் கொண்ட குழு தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வந்தனர் இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள தாய் முடி என்.சி.பகுதியில் இரண்டு தந்தங்களை விற்க முயன்ற தாய் முடி என்.சி.பகுதியை சேர்ந்த மணிகண்டன், ராஜா ,தேவபாலா, ஆகியோரை,கைது செய்து அவர்களிடமிருந்த சுமார் 5 அடி நீளமுள்ள இரண்டு தந்தங்கள் மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்திய ,ஒரு காரையும் கைப்பற்றிய வனத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டபோது வனத்துறையில் தற்காலிக பணியாளராக அய்யர் பாடி பீட்டில் பணியாற்றிய பிரேமதாஸ் மற்றும் ராமர் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதை கண்டறிந்த வனத்துறையினர் அவர்களையும் கைது செய்தனர். உட்பட மொத்தம் ஐந்து பேர்களை கைது செய்து மானாம்பள்ளி வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஐந்து பேர்கள் மீதும் இறந்த யானையின் தந்தங்களை திருடியது மற்றும் அதை விற்க முயன்றது உள்ளிட்ட வனச்சட்டப்படி வழக்கு பதிவு செய்து வால்பாறை அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் மேலும் மணிகண்டன் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே குற்றச் செயலில் ஈடுபட்டு வழக்கு நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதுஇச்சம்பவம் வால்பாறை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags : வால்பாறையில் ரூ.பலகோடி மதிப்பிலான யானை தந்தத்தை விற்க முயன்ற ஐந்து பேர் கைது.