ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்து 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்.
குக் தீவுகளின் கொடியுடன் எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் தெற்கு நகரமான ஜாஸ்கில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் கவிழ்ந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் 8 இந்தியர்கள், ஒரு இலங்கையை சேர்ந்தவர் என 9 கப்பல் பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். . 'பிரஸ்டீஜ் ஃபால்கன்' என்ற கப்பல், ஓமனின் தொழில்துறை துறைமுகம் அருகே விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயமானதாக, ஓமன் கடல்சார் பாதுகாப்பு மையம் தெரிவித்திருந்த நிலையில், 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, மீதமுள்ள நபர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என ஓமனுக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
Tags : ஓமன் கடலில் எண்ணெய் டேங்கர் கப்பல் கவிழ்ந்து விபத்து 13 இந்தியர்கள் உட்பட 16 பேர் மாயம்.