ஐடி ரெய்டு.. மரத்தில் சிக்கிய மர்ம பெட்டி

கர்நாடக தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அசோக்குமார் ராயின் வீட்டில் புதன்கிழமை முதல் வருமான வரி சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வருமான வரித்துறையினர் அசோக்குமார் ராயின் சகோதரர் சுப்ரமணிய ராயின் வீட்டில் நடத்திய சோதனையில், வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் மறைத்து வைக்கப்பட்ட பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அரசியல்வாதியை சும்மா விடக்கூடாது என தெரிவித்து வருகின்றனர்.
Tags :