திருநெல்வேலி -  சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

by Editor / 04-09-2024 11:50:47pm
திருநெல்வேலி -  சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மானாமதுரை, காரைக்குடி, திருவாரூர், மயிலாடுதுறை வழியாக இயக்கப்படும் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் சேவை ஆகஸ்ட் மாதம் வரை செயல்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதத்திற்கு  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலியில் இருந்து இரவு 06.45 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06070) செப்டம்பர் 12, 19, 26, அக்டோபர் 3, 10, 17, 24, 31, நவம்பர் 7, 14, 21, 28 ஆகிய வியாழக்கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 08.30 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். மறு மார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 03.00 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி சிறப்பு ரயில் (06069) செப்டம்பர் 13, 20, 27,  அக்டோபர் 4, 11, 18, 25, நவம்பர் 1, 8, 15, 22, 29 ஆகிய வெள்ளிக் கிழமைகளில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 07.10 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

 

Tags : திருநெல்வேலி -  சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு.

Share via