ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

by Admin / 08-01-2026 10:09:57am
 ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஜனவரி ஒன்பது மற்றும் பத்தாம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம் திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலாற்று விடுக்கப்பட்டுள்ளது .சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பலத்த காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் .

 

 

Tags :

Share via