ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம்-கைது

by Admin / 08-01-2026 03:10:51pm
 ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம்-கைது

சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலாளர் தமிழக அரசின் புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்றும் ஓய்வு பெற்ற ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக 15 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் பணி அனுபவத்தின் அடிப்படையில் ஊதிய உயர்வு மற்றும் காலில் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் ஊராட்சி ஒன்றிய எழுத்தர்களுக்கு இணையான பனி பலன்களை தங்களுக்கு விரிவு படுத்த வேண்டும் என்றும் அரசு ஊழியர் சங்கங்களுடன் இணைந்து கால வரையறையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என சங்க நிர்வாகிகள் அறிவித்த நிலையில் இன்று அவர்கள் போராட்டங்களின் போது காவல்துறையினால் கைது செய்யப்பட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo