ஆளுநர் டெல்லிக்கு திடீர் பயணம் காரணம் என்ன..?

சென்னை விமானநிலையத்தில் இருந்து நேற்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தனது மனைவியுடன் விஸ்தாரா ஏர்லைன்ஸ் மூலமாக டெல்லிக்கு 2 நாள் பயணமாக புறப்பட்டு சென்றார். அவர்களுடன் பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். இன்று இரவு 10.40 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார் என விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஈரோடு இடைத்தேர்தல் நடைபெற உள்ளநிலையில் ஆளுநரின் பயணம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.மேலும், ஆளுநர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணத்தில், எவ்வித அரசியல் முக்கியத்துவமும் இல்லை. அவர் சொந்த விஷயமாக டெல்லி சென்றுள்ளார் என கூறப்பட்டுள்ளது.
Tags :