ராகுலுக்கு போட்டியாக பா.ஜ.க. தலைவர்கள் சுற்றுப்பயணம்.
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு மே மாதம் தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு மீண்டும் பா.ஜனதா ஆட்சி அமைக்க அக்கட்சி மேலிடம் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், இந்திய ஒற்றுமைக்கான பாதயாத்திரையை ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கினார். அவர் மைசூரு, துமகூரு வழியாக நேற்று சித்ரதுர்காவில் தனது நடைபயணத்தை மேற்கொண்டார். அவரது பாதயாத்திரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதற்கு பதிலடியாகவும், சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டும் பா.ஜனதா மேலிடம் காங்கிரஸ் பாதயாத்திரைக்கு போட்டியாக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, தற்போதைய முதல்-மந்திரி பசவராஜ்பொம்மை ஆகியோரை களத்தில் இறக்கியுள்ளது. இரு தலைவர்களும் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்கள்.
Tags :
















.jpg)


