இந்தியாவின் தங்க மங்கையானார் அவனி லேகாரா... துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை...

by Admin / 30-08-2021 01:17:45pm
இந்தியாவின் தங்க மங்கையானார் அவனி லேகாரா... துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று சாதனை...



பாராலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற வரலாற்று சாதனையை அவனி லேகாரா படைத்துள்ளார்.
 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.  இந்த போட்டியில் இந்தியா சார்பில் வீரர்கள் பலர் பங்கேற்று, திறமைகளை வெளிப்படுத்தி வருவதோடு, இதுவரை 3 வௌ்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்நிலையில், மகளிர் துப்பாக்கி சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் பங்கேற்ற வீராங்கனை அவனி லேகாரா இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தார். இந்த போட்டியானது இன்று நடைபெற்ற நிலையில், இலக்கை சரியாக குறிவைத்து அதிக புள்ளிகளுடன் முன்னிலை வகித்த அவனி லேகாரா, தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

 இவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

அவனி லேகாராவிற்கு டிவிட்டர் வாயிலாக வாழ்த்து கூறிய  பிரதமர் மோடி,  கடின உழைப்புக்கு கிடைத்த தங்கம் எனவும், இது இந்திய விளையாட்டு துறைக்கு கிடைத்த சிறப்பு தருணம் எனவும் வாழ்த்தினார்.

உலக சாதனையை சமன்படுத்தி, இந்தியாவிற்கு முதல் தங்கத்தை பெற்றுத்தந்துள்ளதாக அவனி லேகாராவை, இந்தியாவின் பாராலிம்பிக் கமிட்டி குழு தலைவர் தீபா மாலிக் பாராட்டியுள்ளார்.

 

Tags :

Share via