ரிதன்யா வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு
திருப்பூர் மாவட்ட அவிநாசியில் வரதட்சணை கொடுமையால் புதுமணப்பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் கைதான கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். மூவருக்கும் ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து மனுத்தாக்கல் செய்ய உள்ளதாக ரிதன்யாவின் தந்தை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, காவல் துறை பதிலளிக்க அவகாசம் அளித்த நீதிபதி, வழக்கை ஜூலை 30ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
Tags :



















