பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: முதல் வெற்றியை பதிவு செய்த பிரக்ஞானந்தா

பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. 9 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டியில், இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த போட்டியில் பங்கேற்ற பிரக்ஞானந்தாவின் முதல் 2 ஆட்டங்களும் டிரா ஆனது. இந்நிலையில், பிரக்ஞானந்தாவின் 3ஆவது ஆட்டம் இன்று (மார்ச்.,1) நடைபெற்றது. இதில், செக்குடியரசின் தாய் டாய் வான் உடன் மோதினார். இதில், பிரக்ஞானந்தா தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார்.
Tags :