விளவங்கோடு இடைத்தேர்தலில் 17.09% வாக்குப்பதிவு

by Staff / 19-04-2024 12:44:01pm
விளவங்கோடு இடைத்தேர்தலில் 17.09% வாக்குப்பதிவு

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விளவங்கோடு தொகுதியில் வென்ற விஜயதரணி காங்கிரஸில் இருந்து விலகி பா.ஜ.கவில் இணைந்ததோடு தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இன்று மக்களவை தேர்தலோடு சேர்த்து இடைத்தேர்தல் நடக்கிறது. காலை 9 மணி நிலவரப்படி விளவங்கோடு இடைத்தேர்தலில் 10.85% வாக்குகள் பதிவானது. சற்றுமுன்னர் வெளியான 11 மணி நிலவரப்படி 17.09 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

Tags :

Share via