சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் போஸ்டர்

by Editor / 27-06-2021 08:54:14pm
சசிகலாவை வரவேற்று ராஜபாளையத்தில் போஸ்டர்

ராஜபாளையத்தில் சசிகலாவை வரவேற்கும் விதமாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த சுவரொட்டியில், 'அழிந்து வரும் அதிமுகவை காப்பாற்ற அம்மாவின் வழியில் தியாக தலைவியே வாருங்கள்' என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் சசிகலா புகைப்படம் பெரியதாகவும், இதனை அடுத்து ஜெயலலிதா, எம்ஜிஆர் மற்றும் அண்ணா படங்களும் இந்த சுவரொட்டியில் இடம் பெற்றுள்ளது.

இவண் என்னுமிடத்தில் பெயர் இல்லாமல், விருதுநகர் மாவட்ட உண்மை தொண்டர்கள் என அச்சிடப்பட்டுள்ளது. நகரின் பிரதான பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டிகளால் அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Tags :

Share via