பீகார் மாநில பா.ஜ.க முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவி ஏற்பு

by Admin / 15-04-2026 10:14:14am
பீகார் மாநில பா.ஜ.க  முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவி ஏற்பு

பீகார் முதலமைச்சராகப் பத்து முறை பதவி வகித்த நிதீஷ் குமார், ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பீகார் மாநில வரலாற்றிலேயே பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியை ஏற்பது இதுவே முதல் முறையாகும்.
பாட்னாவில் லோக் பவனில் இன்று காலை 11.00 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறத் உள்ளது.
சாம்ராட் சௌத்ரி பாஜக மற்றும் என்.டி.ஏ சட்டமன்றக் கட்சித் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் கட்சியிலிருந்து இருவர் துணை முதலமைச்சர்களாகப் பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

நிதீஷ் குமார் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் சையத் அட்டா ஹஸ்னைனிடம் சமர்ப்பித்தார். இதன் மூலம் பீகாரில் நீண்ட காலமாக நீடித்து வந்த நிதீஷ் ராஜ் முடிவுக்கு வந்து, ஒரு புதிய அரசியல் யுகம் தொடங்கியுள்ளது

 

Tags :

Share via

More stories

Logo