கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ராகுல் காந்தி அணை கட்டாமல் இருப்பதற்கு கட்டளை இட்டால் தாம் பா.ஜ.க கூட்டணியில் இருந்து வெளியேறுவேன்
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழக முதலமைச்சர் கர்நாடக செல்ல இருப்பதாக கூறப்படும் தகவல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு முறையாக அனுமதி பெறாத ஒரு திட்டத்திற்காக பேச்சுவார்த்தை நடத்துவது தமிழகத்தின் உரிமையை வலுவிழக்கச் செய்யும் என்றும் அந்த சூழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் சிக்காமல் அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதோடு மேகதாது அணை விஷயத்தில் பாஜகவும் காங்கிரசும் தமிழகத்திற்கு எதிராக கூட்டு சதியில் ஈடுபடுவதாகவும் மேகதாது அணை அமைந்தால் சுமார் 12,500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள் அழியும் என்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படும் என்றும் ஆகஸ்ட் மாதம் தமிழகம் வர இருக்கும் ராகுல் காந்தியிடம் மேகதாது அணை கட்டக் கூடாது .அது தமிழகத்திற்கு எதிரானது என்று அழுத்தம் கொடுக்க காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூருக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு ராகுல் காந்தி அணை கட்டாமல் இருப்பதற்கு கட்டளை இட்டால் தாம் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவேன் என்றும் கோபமாக தெரிவித்தார்.
Tags :


















