அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் குறித்து ஆலோசனை அமைச்சர் நிர்மல்குமார்
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் 436 திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். மேலும், லஞ்சம் இல்லாத ஆட்சி மற்றும் போதையில்லா தமிழகம் உருவாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு முதலமைச்சர் அமைச்சர்களுக்கு அறிவுறுத்தியதாக தெரிகிறது. மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை, நிதி நிலைமை மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
Tags :


















