மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் அவல நிலை.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இம்ம மருத்துவமனையில் தினந்தோறும் 50க்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
இரவு நேரங்களில் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாததால் செவிலியர் மருத்துவம் பார்க்கும் நிலை உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.விஷக்கடிகள் மற்றும் பல்வேறு நோய்களுக்காக கிராமப் பகுதிகளில் இருந்து தனியார் மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் தான் அரசு மருத்துவமனைக்கு வருகின்றோம்.ஆனால் பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு இரவு நேரங்களில் மருத்துவர் இல்லாமல் செவிலியர் மட்டும் இருப்பதால் உரிய சிகிச்சை அளிக்கப்படாமல் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவதாக கூறுகின்றனர்.அதுமட்டுமல்லாமல் கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு காலங்களில் இரவு நேரத்தில் வந்தால் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதால் சிரமத்திற்கு உள்ளாவதோடு உயிரிழப்பும் ஏற்படும் நிலை உள்ளதாகவும் கூறுகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நெமிலி தாலுகாவாக பிரிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் இப்பகுதியில் இந்த மருத்துவமனை விரிவுபடுத்தப்படவில்லை என கூறுகின்றனர்.தனியார் மருத்துவமனைக்கு சென்று மருத்துவம் பார்க்க வசதி இல்லாமல் ஏழை எளிய மக்கள் கிராமப் பகுதிகளில் இருந்து அரசு மருத்துவமனைக்கு நாடிவருகின்றனர்.ஆனால் அரசு மருத்துவமனையில் இப்படிப்பட்ட சூழல் இருப்பதாக கூறுகின்றனர்.எனவே இப்பகுதியில் உள்ள மருத்துவமனையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் 24 மணி நேரமும் மருத்துவர் இருக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags : மருத்துவர்கள் இல்லாமல் செவிலியர்கள் சிகிச்சை அளிக்கும் அவல நிலை.