மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா-தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

by Editor / 19-10-2023 10:53:13pm
 மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா-தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா இம்மாதம் 24, 25-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. பிறந்த நட்சத்திரத்தை வைத்து அவரது பிறந்த தினத்தையே இவ்வாறு கொண்டாடுகின்றனர். இதை முன்னிட்டு அன்றைய தினம் (அக்.25) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப். அன்று மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.

 

Tags : தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

Share via

More stories

Logo