விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது..

by Editor / 21-06-2024 05:44:38pm
 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 14ம் தேதி தொடங்கியது. போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர், இன்றுடன் (ஜூன் 21) வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து அளித்த மனுக்கள் மீது ஜூன் 24 பரிசீலனை நடக்கிறது. மனுவை திரும்ப பெற 26ம் தேதி கடைசி நாளாகும்.

 

Tags : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்

Share via