ஊழியர் அடித்துக் கொலை

தெலுங்கானா மாநிலத்தில் மனதை உலுக்கும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் ஜன்வாடாவில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு திங்கள்கிழமை நள்ளிரவு மூன்று இளைஞர்கள் காரில் வந்துள்ளனர். பெட்ரோல் நிரப்பிய பிறகு பணம் செலுத்துவதற்காக ஏடிஎம் கார்டு கொடுத்துள்ளனர். கார்டு வேலை செய்யாததால் ஊழியர் பணம் தருமாறு கேட்டுள்ளார். அவர்கள் கொடுக்க முடியாது எனக்கூறி ஊழியரை கடுமையாக தாக்கினர். ஊழியர் தாக்கப்படுவதை தடுக்க முயன்ற மற்றொரு ஊழியரும் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.
Tags :