முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் மறைவு-வைகோ, தமிழிசை,சசிகலா ,இரங்கல்.
முன்னாள் முதல்வர் அன்புச் சகோதரர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் அன்னையார் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். அலைபேசியில் அவரிடம் என்னுடைய துக்கத்தை தெரிவித்தேன்.
அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்-வைகோ இரங்கல்
தமிழக முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் தாயார் திருமதி.பழனியம்மாள் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் மன வேதனை அடைந்தேன் .அன்புத்தாயாரை இழந்து வாடும் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.- டாக்டர்.திருமதி. தமிழிசை சௌந்தரராஜன்.
ஓ.பி.எஸ். தாயார் மறைவுக்கு சசிகலா இரங்கல்.
Tags :