வானில் தோன்றும் அதிசயம்

by Staff / 01-02-2023 11:26:28am
வானில் தோன்றும் அதிசயம்

இன்னும் 2 நாட்களில் வானில் அதிசயம் ஒன்று நடக்க இருக்கிறது. 50,000 ஆண்டுகளுக்கு முன் வானில் காணப்பட்ட பச்சை நிற வால் நட்சத்திரம் மீண்டும் தோன்றவுள்ளது. பிப்ரவரி 2ம் தேதி முதல் பிப்ரவரி 6ம் தேதி வரை மக்கள் இதை வானில் காணலாம். விஜயவாடாவில் இருக்கும் மக்கள் தெளிவாக இதை பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து விலகி வரும் கற்களில் இருந்து பனிக்கட்டிகள் உருகி தூசுக்களையும், வாயுக்களையும் வெளியிடுவதால் இதன் வால் நீண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via

More stories